search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் விடுதி"

    • விருதுநகரில் சட்டபேரவை உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் அருள், ஜெயக்குமார், ரூபி.ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து, சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்த உறுதி மொழிகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தாமதமாகும் திட்டப்பணிகள் குறித்தும், அதனை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், ஆர்.ஆர்.நகர் சிமெண்ட் தொழிற்சாலை, சிவகாசி தீயணைப்பு நிலையம், ஆமத்தூர் ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    • ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    இந்த விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி னார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். பின்னர் அைமச்சர் பேசியதாவது:-

    கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருத ப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வருகிறார்.

    இதுபோன்று, மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தரமான கல்வியை பெற்று, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, தரமான கல்வியை பெறுவதற்கு அடிப்படையாக விளங்கி வரும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத் துரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், மானா மதுரை வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேசுவரி, தீத்தான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜலட்சுமி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

    அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    • திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    கடலூர்:

    திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.

    போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.37 கோடி செலவில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.37 கோடி செலவில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கான பணியை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் பூபாலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேண்டாமிர்தம் வேதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவியர்கள் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி மாணவ, மாணவியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விகிதாசாரா அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலாரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டர் தொலைவிற்கு மேலும் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

    விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பா ளாரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    விடுதிகளில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப்பயில அனுமதிக்கப்படுவார்கள் .

    விடுதி மாணாக்கர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும், மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ ர்களுக்கு கம்பளி, மேலாடையும் வழங்கப்படும்.

    எனவே, மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு கல்வி பயில வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×